பிரபல ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டன் (70), எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, க்ரை ஃப்ரீடம், மால்கம் எக்ஸ், ஃப்ளைட், தி டிராஜடி ஆஃப் மேக்பத், அமெரிக்கன் கேங்ஸ்டர் மற்றும் கிளாடியேட்டர் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
9 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டென்சல் வாஷிங்டன், ‘குளோரி’ மற்றும் ‘டிரெய்னிங் டே’ படங்களில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். சமீபத்திய ஒரு நேர்காணலில், அவர் ஆஸ்கார் விருதுகளில் ஆர்வம் இல்லை என்று கூறினார்.

“நான் விருதுகளை வெல்ல படங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. இதுபோன்ற விஷயங்களைப் பற்றி எனக்கு ஆர்வமோ கவலையோ இல்லை.
எனது கடைசி நாட்களில் ஆஸ்கார் விருதுகள் எனக்கு எந்த நன்மையும் செய்யப்போவதில்லை. மனிதன் விருதுகளை வழங்குகிறான், கடவுள் வெகுமதிகளை வழங்குகிறான்.”