சென்னை: ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்துக்கு ‘தேவரா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். பிரகாஷ்ராஜ் மற்றும் சைஃப் அலிகான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் பான் இந்தியா படமாக வரும் 27-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஜூனியர் என்டிஆர் கூறியதாவது:-
நான் சென்னையில் குச்சுப்புடி கற்றேன் என்பது பலருக்குத் தெரியாது. ‘தேவரா’ எனக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாம் மொழியால் பிரிக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் சினிமாவால் அல்ல. இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று நம்மைப் பிரிக்க முடியாது. எனக்குப் பிடித்த வெற்றிமாறனுடன் படம் பண்ண ஆசை.
தமிழில் நேரடியாக நடித்து, தெலுங்கில் டப்பிங் செய்ய வேண்டும்” என்றார் ஜூனியர் என்டிஆர்.