தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண்விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ராஜ்கிரண் மற்றும் தனுஷ் இணைந்து நடித்த “என் பாட்டன் சாமி வரும்” என்ற மூன்றாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது. அந்தோணி தாசன் குரலில் உருவான இந்த பாடல், மண்ணின் மணத்தை மிக்க கிராமிய உணர்வை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

சமீபத்தில் வெளிவந்த குடும்பஸ்தன், மாமன், தலைவன் தலைவி போன்ற கிராமத்து பின்னணியிலான படங்கள் வசூலில் வெற்றியடைந்துள்ளதால், அதே வரிசையில் இட்லி கடைவும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரப் பின்னணிப் படங்கள் ரசிகர்களை கவராத சூழலில், கிராம வாழ்க்கையின் உணர்வை வெளிப்படுத்தும் தனுஷின் படைப்பு அனைவரையும் கவரும் என கூறப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கவனம் ஈர்த்துள்ள நிலையில், புதிய பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காந்தாரா சாப்டர் 1 போட்டியாக வெளிவந்தாலும், தமிழ்நாட்டில் இட்லி கடை வசூலில் சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.