தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மூலம் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., மாநாடு, மற்றும் வணங்கான் போன்ற படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார். நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளார்.

சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்திற்கும் எந்த நடிகர்களோ அல்லது நடிகைகளோ தேர்வு செய்யப்படவில்லை. வளரும் நடிகர்களே, தயவுசெய்து தகவலைச் சரிபார்த்து அதற்கேற்ப செயல்படுங்கள். தவறான நபர்களை நம்பாதீர்கள். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”