தக் லைஃப் படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் 49ஆவது படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தில் சிம்பு கல்லூரி வாத்தியாராக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

பட பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது, அதன்பின் அப்டேட் செய்திகளும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டின. படத்திற்கு இசையமைப்பாளராக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சிம்புவின் ரசிகராக இருந்து தற்போது அவரது படத்திற்கே இசையமைப்பது பெருமை என தெரிவித்துள்ளார்.
சந்தானம், இப்படத்தில் முக்கியமான காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் எஸ்டிஆர் 49 படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. டிராகன் படத்தில் கவனம் ஈர்த்த கயாடு லோஹர், இப்போது இந்தப் படத்தில் நாயகியாக கமிட் ஆகியுள்ளார்.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்துள்ளது. கயாடு லோஹர் தற்போது தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இதயம் முரளி படத்திலும் அதர்வாவுடன் நடித்து வருகிறார். மமிதா பைஜூ மற்றும் மிருணாள் தாஹூர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.மமிதா பைஜூ வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
மிருணாள் தாஹூர், சிம்புவின் ஜோடியாக வருகிறார். மூன்று ஹீரோயின்களும் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எஸ்டிஆர் படம் என்றால் நடிகைகள் ஓரங்காட்டாமல் உடனே ஒப்புதல் தருவதாக கூறப்படுகிறது.ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார். 50வது படம் முடிந்ததும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 51ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். எஸ்டிஆர் 49 படத்தில் கயாடு லோஹரின் பங்கு, படத்திற்கு கூடுதல் ஆற்றலை கொடுக்கிறது. ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.