கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த “இந்தியன் 2” திரைப்படம் கடந்த ஆண்டு எதிர்பார்ப்புகளுடன் ரிலீசானது. ஆனால், இப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்றது.

படத்தின் விமர்சனங்களும், கேலிகளும் படத்தை சிரமமாக்கின. இவற்றின் காரணமாக, படத்தில் இருந்து 12 நிமிட நேரம் குறைக்கப்பட்டது. ஆனால், அந்த மாற்றமும் படம் தியேட்டருக்குள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இதனால், “இந்தியன் 3” பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் குறைந்தது.
அந்த நிலையில், “இந்தியன் 3” நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் என தகவல்கள் பரவின. ஆனால், இதனை ஷங்கர் மறுத்தார். தற்போது, “இந்தியன் 3” படத்துக்கான வேலைகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்றாம் பாகத்துக்கான ஷூட்டிங் இன்னும் 20 நாட்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கமல்ஹாசனை சந்தித்து, இந்த படத்திற்கு தேவையான தேதிகளை முடிவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.