சென்னை : சென்னையில் 3 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி செம வசூல் வேட்டை நடத்தியுள்ளது. அஜித்தின் விடாமுயற்சி வசூலை இந்த படம் முந்தி செல்லும் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளியாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
அதேசமயம் வசூல் வேட்டையும் தாறுமாறாக நடந்து வருகிறது.
இந்த படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 30.9 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. 2ம் நாளில் படம் தமிழகத்தில் ரூ. 13.50 கோடி வரை வசூலித்துள்ளது.
இந்த நிலையில் 3ம் நாளில் குட் பேட் அக்லி சென்னையில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் சென்னையில் 3 நாள் முடிவில் ரூ. 7 கோடி வரை வசூலித்துள்ளதாம்.