தமிழ் இசை உலகில் தனி பாதை அமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. தனது இசைத் திறமையால் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இவர், இளையராஜாவின் மூன்றாவது மகனாகவும் அடையாளம் பெற்றுள்ளார். 1997ஆம் ஆண்டு அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவனுக்கு அப்போது வயது 17க்கும் குறைவாக இருந்தது.

ஆரம்பத்தில் அவருடைய இசை பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. ஆனால், பூவெல்லாம் கேட்டுப்பார் படம் மூலம் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். வசந்த் இயக்கிய இப்படத்தின் இசை இன்று வரை evergreen என்றழைக்கப்படுகிறது. இருந்தாலும், யுவன் தனது தனித்துவமான இசை பாணியை கொண்டு 2000களில் புகழின் உச்சியைத் தொட்டார். செல்வராகவன், ராம், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை தந்தார்.
அதன்பிறகு யுவன் பல தனிப்பட்ட பிரச்சனைகளும் எதிர்கொண்டார். இரண்டு திருமணங்கள் முதல் முறையாகச் செட் ஆகவில்லை. மூன்றாவது முறையாக அவர் இஸ்லாமிய மதத்தினரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார்.
இந்த திருமணத்திற்கு ஆரம்பத்தில் தந்தை இளையராஜா சம்மதிக்கவில்லை என்பது இப்போது வெளியான தகவல். பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியில் இது உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
யுவனின் மூன்றாவது திருமணத்திற்கு எதிராக இருந்த ராஜாவை அவரின் மகள் பவதாரிணி சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பவதாரிணி, “இரண்டு திருமணங்களும் தோல்வியடைந்துள்ள நிலையில், இம்முறை சந்தோஷமாக இருக்கட்டும்” என்று கூறியதையடுத்து தான் ராஜா சம்மதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மரணமடைந்தது ரசிகர்களுக்கு வலியுடன் செய்தியாக இருந்தது.
இப்பொழுது யுவன் குடும்ப வாழ்க்கையை அமைதியாக நடத்தி வருகிறார். அவரது இசைப் பயணமும் தொடர்கிறது. அவர் கடைசியாக நேசிப்பாயா, ஸ்வீட் ஹார்ட், அகத்தியா போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
இந்த தகவல்கள் அவரது வாழ்க்கையின் உணர்ச்சி மிகுந்த ஒரு புதிய பரிமாணத்தை ரசிகர்களுக்கு காட்டுகின்றன.