சென்னை: தமிழ் சினிமா உலகம் தற்போது அதிர்ச்சியில் உள்ளது. நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு, அவர்களது ஜாமீன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக இருக்கையில் நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரின் பேட்டியில், மீ டூ விவகாரம் குறித்து பேசும் போது தமக்கு எதிராகவே கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறுகிறார். வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆவலால் தான் அட்ஜஸ்மெண்ட் என ஏற்றுக்கொண்டதாகவும், இது தான் அந்தக் காலத்து வழிமுறை என எண்ணியதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய நடிகைகளும் இதே வழியில்தான் வந்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். ஆனால் இது குறித்து யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை என்றார். த்ரிஷா மற்றும் நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள், போதைப்பொருள் விவகாரத்தில் கூட ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் அவர் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டு.
அவர்கள் பொது வாழ்க்கையில் எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்வதில்லை, தொழில்முனைவு மற்றும் புகழையே மட்டும் நாடுகிறார்கள் என்றும் விமர்சித்தார். ரசிகர்களை பிசினஸாக மட்டுமே பார்ப்பதாகவும், உண்மையான சமூகப் பொறுப்பு எதுவும் அவர்களிடம் இல்லையெனவும் கூறினார்.
நயன்தாராவிடம் கேள்வி எழுப்பிய அவர், ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரைச் சுமக்கும் நபர் ஒரு பொது அறிவுரை கூட தர முடியவில்லையா எனக் கேட்கிறார். குறைந்தபட்சமாக இளைஞர்களை போதைப் பொருட்களிலிருந்து விலகச் சொல்வதற்கான ஒரு ட்வீட் கூட வெளியிடவில்லை என சுட்டிக்காட்டுகிறார்.
சிறிய நடிகையாக இருந்தாலும் தான் இதுபோன்ற சமூகப் பிரச்சனைகளில் தனது குரலை ஒலிக்கிறேன் எனும் எண்ணத்துடன் தான் இந்த கருத்துக்களை வெளியிடுகிறேன் என்றும், பெரிய நடிகைகள் மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்கிறார். அவரது இந்த நேரடி விமர்சன பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.