சென்னை: சுந்தர்.சிக்கு வில்லனாக அனுராக் காஷ்யப் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் 100 கோடி வசூலித்த பெருமையை பெற்றது. சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு பாகம் 2 மற்றும் சில படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதே சமயம் படங்களிலும் நடித்து வருகிறார்.
இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் “ஒன் 2 ஒன்” படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த படத்தை 24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தை குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுக் குறித்து வெளியிட்ட போஸ்டரில் சுந்தர் சி மிகவும் கோவத்துடன் காணப்படுகிறார். அனுராக் காஷ்யப் ஒரு முகமுடியை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அனுராக் காஷ்யப் லியோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தாலும், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தில் அசத்தலான வில்லன் நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்த விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.