சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என புகார் அளித்த ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆறு மணி நேரம் விசாரணைக்கு ஆஜராகினார். விசாரணை முடிந்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.

“மாதம்பட்டி ரங்கராஜும் நானும் இரண்டு வருடமாக திருமண வாழ்க்கை நடத்தினோம். அதற்கான ஆதாரங்களையும் அளித்துள்ளேன். என்னை ஏமாற்றியதாக எழுதுகிறார்கள், ஆனால் அவர் தான் என்னை திருமணம் செய்து கொண்டார். தவறான செய்திகளை பரப்பாதீர்கள்” என்று கூறினார்.
மேலும், “இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்த குழந்தைக்கு அவர் தான் அப்பா. எனக்கு பழிவாங்க வேண்டும் என்பதில்லை, ஆனால் என் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். யாராவது பெண் தைரியமாக நியாயம் கேட்க வந்தால், அவளைப் பற்றித் தவறாக எழுதினால் பிற பெண்கள் எப்படி போராடுவார்கள்? குழந்தையின் சாபம் சும்மா விடாது” என எச்சரித்தார்.
அதே சமயம், “என்னை மட்டும் கேள்வி கேட்கிறீர்கள், ஆனால் மாதம்பட்டி ரங்கராஜிடம் ஏன் கேட்கவில்லை? பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டுவது பழக்கமாகி விட்டது. உண்மை வெளியில் வரும் வரை நான் எந்த எல்லைக்கும் செல்வேன்” எனக் கூறி பத்திரிகையாளர்களை உணர்ச்சிவசப்பட்டு சந்தித்தார்.