‘ஜூடோபியா’ என்பது வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸால் 2016-ல் வெளியிடப்பட்ட ஒரு அனிமேஷன் படம். இது பைரன் ஹோவர்ட் மற்றும் ரிச் மூர் இயக்கிய ஒரு போலீஸ் நகைச்சுவை படம்.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் இப்போது ‘ஜூடோபியா 2’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை ஜேரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் இயக்கியுள்ளனர். ஜூடோபியாவின் வரலாற்றில் மிகப்பெரிய குற்ற வழக்கைத் தீர்த்த பிறகு, புதிதாக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் ஜூடி ஹாப்ஸ் மற்றும் நிக் வைல்ட் ஆகியோர் சீஃப் போகோவின் நெருக்கடி காரணமாக ஒன்று சேர்கின்றனர்.

ஆனால் அவர்களின் ஒற்றுமை அவர்கள் நினைத்த அளவுக்கு வலுவாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதை கதை தொடர்ந்து சொல்லும். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படம் நவம்பர் 28 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படும்.