சென்னை: மதுரவாயல் பகுதியில் தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், கலைமாமணி விருதுகள் என பல பொருட்களை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மீது நடிகர் கஞ்சா கருப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் கஞ்சா கருப்புடன் சென்று வீட்டை ஆய்வு செய்தனர். இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.
போலீசார் வீட்டை ஆய்வு செய்யும் பொழுது, ” வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், வீட்டின் உரிமையாளர் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த விருதுகள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி புக் என அனைத்தையும் எடுத்து சென்றுவிட்டார். நான் வாடகை பணம் கொடுத்து விட்டேன், ஆனாலும் அத்துமீறி வீட்டை உடைத்து உரிமையாளர் அடாவடி செய்துள்ளார் என்று கஞ்சா கருப்பு கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, வீட்டிற்கு வாடகை கொடுக்காமல் கஞ்சா கருப்பு மிரட்டுவதாக உரிமையாளர் புகார் கூறியிருந்த நிலையில், வாடகை பணம் கொடுத்து விட்டேன், எனினும் அத்துமீறி வீட்டை உரிமையாளர் உடைத்துள்ளார் என கஞ்சா கருப்பு தற்போது புகார் அளித்திருக்கிறார்.