மும்பை: “காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் எனக்கு ஆதரவளிக்கவில்லை. சினிமா துறையில் இருந்தும் எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. நான் ஒதுக்கப்பட்டதாக உணர்கிறேன்” என்று நடிகை கங்கனா ரனாவத் தனது ‘எமர்ஜென்சி’ படம் பற்றி கூறினார்.
இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “முன்பு சில படங்களுக்கு நெருக்கடிகள் வந்துள்ளன. உதாரணமாக, ‘பத்மாவத்’, ‘உட்தா பஞ்சாப்’ போன்ற படங்கள் நெருக்கடியை சந்தித்தாலும், அந்த படங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியாகின.
மூக்கு, தொண்டை அறுப்போம் போன்ற மிரட்டல்கள் அந்தப் படங்களுக்கு வந்தன. ஆனால் அரசு உரிய பாதுகாப்பு அளித்து படத்தை வெளியிட்டது. ஆனால் என் படம் வந்தபோது யாரும் எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும் எனக்கு ஆதரவளிக்கவில்லை. உண்மையில் எனக்கு திரையுலகில் இருந்தும் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. நான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறேன்.
இப்படிப்பட்ட குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் சிந்தனையைப் பார்க்கும்போது என்ன நம்பிக்கையை நான் மக்களிடம் விட்டுச் செல்கிறேன்? இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ‘நான் தயாரித்த படம் வெளியாகாததை திரையுலகமே கொண்டாடுகிறது’ என தனது வேதனையை பகிர்ந்து கொண்டார். கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீக்கியர்களை தவறாக சித்தரித்துள்ளதால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.