நடிகை கங்கனா ரனாவத், நடிகர் மாதவனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ படத்திற்கு பிறகு கங்கனாவும் விஜய்யும் மீண்டும் இணையும் படம் இது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கங்கனா.

அவர் தேர்தலில் கலந்து கொண்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இப்போது அது மீண்டும் தொடங்கியுள்ளது. டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது.
கங்கனா ரனாவத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது.