சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி பேசிய வீடியோ ஒளிபரப்பானது.
அதில் பேசிய ரஜினி, “எனக்கு ஞானவேல் ராஜாவை ‘பருத்தி வீரன்’ காலத்திலிருந்தே தெரியும். வித்தியாசமான படங்களை எடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. ‘பருதி வீரன்’ படத்திலேயே பார்த்திருப்பீர்கள். ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளலாமா என்று கேட்டார்.
படப்பிடிப்பு காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை. எனவே இந்த வீடியோ. சிறுத்தை சிவாவுடன் ‘அண்ணாத்த’ படத்தில் பணியாற்றினேன். 20-30 படங்களில் பணியாற்றியதால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரை திரையுலகில் பார்க்க முடியாது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.
‘அண்ணாத்த’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது சிவாவிடம், ‘நீ எனக்காக ஒரு பீரியட் ஃபிலிம் பண்ணு’ என்றேன். அவரும் சரி என்றார். அப்படிப் பார்த்தால் ‘கங்குவா’ எனக்காகத் தயாரிக்கப்பட்ட கதையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
டைரக்டர் சிவா எனக்காகவும் ஒரு கதையை உருவாக்குவார் என்று நம்புகிறேன். சூர்யாவின் ஒழுக்கம், கண்ணியம், நேர்மை, அறிவு என அனைவரும் அறிந்ததே. அவரைப் போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது. சூர்யாவுக்கு வித்தியாசமான படங்களில் நடிக்க ஆசை. அப்படித்தான் அவருக்கு ‘கங்குவா’. படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.