நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கனிமொழி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டி ஊக்கத்தொகையையும் வழங்கினார் விஜய். இதுதான் அவர் அரசியலுக்கு வந்த முதல் அடி.
காலை முதல் இரவு வரை மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார். இது பல மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அதன்பின், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதேபோல் இந்த ஆண்டும் மாணவர்களை சந்தித்து பரிசுகளை வழங்கினார். திரையுலக பிரபலங்கள் சிலர் அவரது கட்சியில் சேர முன்வந்துள்ளனர், அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கட்சிக்கு மூன்று சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விஜய்யே சின்னத்தை தேர்வு செய்து விரைவில் தமிழக மக்களுக்கு அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது.
இன்னொரு பக்கம் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். மாநாட்டை நடத்த அனுமதிக்காததில் அரசியல் அழுத்தம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இப்படி வேகமாக கட்சி ஏற்பாடுகளை செய்து வரும் விஜய்க்கு கனிமொழி அறிவுரை கூறியுள்ளார்
எம்பி கனிமொழி அளித்த பேட்டியில், “விஜய்யை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். அவர் தனது குடும்பத்தினருடன் நன்கு அறிந்தவர். தெளிவும் உழைப்பும் இருந்ததாலேயே அவரால் சினிமாவில் இந்த இடத்தை அடைய முடிந்தது. அதேபோல், அரசியலில் பயணிக்குமாறு அவருக்கு அறிவுரை வழங்குவேன்” என்றார்.