பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், சமீபத்தில் தனது உடல் மற்றும் மனநிலையைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். தற்போது அவர் மிகவும் வலிமையற்ற தோற்றத்தில் காணப்படுகிறார். அவர் அணியும் உடைகள் கூட அவரது மெலிந்த உடலமைப்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன.
இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.பெரும்பாலானோர், அவருடைய எடை குறைப்பு மெதட்கள் குறித்து விமர்சனங்கள் கூறியுள்ளனர். Ozempic, Mounjaro போன்ற மருந்துகளைப் பயன்படுத்தியதால்தான் இத்தகைய வித்தியாசம் ஏற்பட்டதா என கேள்விகள் எழுகின்றன. இதற்கிடையில் கரண் ஜோஹர் தான் Body Dysmorphia என்ற மனநிலை பாதிப்பால் பாதிக்கப்படுகிறார் என கூறினார்.இந்த நிலைமையில் உள்ளவர்கள் தங்களுடைய உடலமைப்பை நன்றாகவே இருந்தாலும் தவறாகவே நினைப்பார்கள்.

கண்ணாடியில் நம்மை பார்க்க கூட விருப்பமில்லாமல் இருக்கும் இந்த நோய், அவரை பாதித்துள்ளது.அத்துடன், பல ஆண்டுகளாக அவர் உடல் பருமனுடன் போராடி வருவதாகவும் தெரிவித்தார். டயட், ஒர்க்அவுட் என பல முறைகளை முயற்சி செய்தும், சமீபத்தில் தான் தைராய்டு பிரச்சனை இருப்பது தெரியவந்ததையும் பகிர்ந்தார்.இது போன்ற சிக்கல்களை சமாளிக்க சிகிச்சைகள் எடுத்துக் கொண்டிருப்பதாகவும், தற்போது மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார்.கரணின் இந்த வெளிப்பாடு பலருக்கும், உடல் தோற்றம் குறித்த அழுத்தங்களை சமாளிக்க உதவியாக உள்ளது.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள், “கரண், நீர் அழகாகவே இருக்கிறீர்கள். கண்ணாடியில் உங்களை பார்த்து, ‘நான் அழகாக இருக்கிறேன்’ என்று சொல்லுங்கள்” என ஊக்கமளித்து வருகின்றனர்.தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் அவரது நெஞ்சார்ந்த பேச்சு, மனநலப் பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் அவரை விமர்சிக்கும் சிலரைப் போல இல்லாமல், உண்மையை நேர்மையாகச் சொன்னவர் என்று பலரும் பாராட்டுகின்றனர்.இத்தகைய நேர்மையான உரையாடல்கள், சமூகம் மனநலத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும் காலத்தை நோக்கி நகரவேண்டும் என்பதற்கான சுட்டியாக இருக்கின்றன.நீங்களும் உங்கள் உடல், மனநலத்தில் ஏதாவது சிக்கல் இருக்கிறது என நினைத்தால், தயங்காமல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.கரணின் பயணம், மற்றவர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக அமையும் என்பது உறுதி.