சென்னை: கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதுகுறித்து திரையுலகில் பலரும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்பு செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்” என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

ஆனால், விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ரஜினியின் இந்த பதிவு குறித்து மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “மிகவும் வேதனையாக இருக்கிறது – கழுகு ஆதங்கம்… இன்னைக்கு மட்டும் கழுகுக்கு திடீர்னு கண்ணு வேர்க்குது” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், ரஜினியை குறிவைத்து விமர்சித்ததாக இணையத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.
இந்த சம்பவம் அரசியல் மற்றும் சினிமா உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் ரஜினியின் பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மாறனின் கடும் கருத்துகள் சமூக ஊடகங்களில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.