ஐதராபாத்: ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கின்றனர். இந்த பான்-இந்தியா படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்தப் படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது ஒடிசாவில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ஹைதராபாத்தில் காசி போன்ற அலுமினிய தொழிற்சாலை வளாகத்தில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. படக்குழு ஒடிசாவில் இருந்து திரும்பிய பிறகு இந்த செட்டில் படப்பிடிப்பு நடைபெறும். இதற்காக 600 துணை நடிகர்கள் இங்கு அழைத்து வரப்படுவார்கள்.
முன்னதாக இந்த காசி செட்டை படக்குழு ரகசியமாக வைத்திருந்தது. ஆனால் சிலர் அதை படம் பிடித்து இணையத்தில் பரப்பி வருகின்றனர். இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.