ஆனந்த் எல்.ராய் நடித்த ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான தனுஷ், இவர் இயக்கிய ‘அட்ரங்கி ரே’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது மீண்டும் தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறார். படத்திற்கு ‘தேரே இஸ்க் மே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் படக்குழு அதை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக வெளியான டீசர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.