தமிழ் சினிமாவில் “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அதன் பின்னர் ‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றியுடன் ரசிகர்களிடையே தனி இடத்தை பெற்றார். விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்ததன் மூலம் முன்னணிப் பேமிலி ஹீரோயினாக உயர்ந்தார். அந்தப் பருவத்தில் தான், சாவித்திரியின் வாழ்க்கையை ஆதாரமாக கொண்ட ‘மகாநதி’ படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் பலர் சந்தேகத்துடன் பார்த்தாலும், அவரின் அபாரமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இதன் காரணமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

அதே நேரத்தில், தேசிய விருது பெற்றாலும், அவரது கரியரில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் தேடிவரவில்லை. மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படம் அவருக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, ‘சைரன்’, ‘ரகுதாத்தா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். ஹிந்தியில் பேபி ஜான் படத்தில் கமிட்டான அவர், அந்தப் படத்தில் வருண் தவானுடன் இணைந்து நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம், ரசிகர்களிடம் சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், கீர்த்தியின் கிளாமர் டான்ஸ் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், கீர்த்தி தனது பள்ளிக் கால தோழராக இருந்த ஆண்டனி தட்டியுடன் கடந்த வருடம் கோவாவில் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டார். கிறிஸ்தவமும் இந்துமுறையிலும் நடந்த திருமண நிகழ்ச்சி, ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. திருமணத்திற்கு பின், மீண்டும் நடிப்பில் தீவிரமாக மாறியுள்ளார். தற்போது கூட, இன்னொரு பாலிவுட் படத்தில் கமிட்டாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கணவர் ஆண்டனி தட்டிலும், கீர்த்தியின் பணிக்கு முழு ஆதரவு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தாவுடன் இணைந்து எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமந்தா பகிர்ந்த அந்தப் புகைப்படத்தில், இருவரும் உணவுக்கு அமர்ந்திருந்தனர். “மதிய உணவுக்காக அமர்ந்தோம்… சூரியன் மறைந்த பின் எழுந்தோம்” என சமந்தா இன்ஸ்டாகிராமில் எழுதியிருந்தார். ரசிகர்கள் இந்தப் போட்டோவின் பின்னணி குறித்து ஆர்வமாகக் கருத்துகள் பதிவிட, இது இணையத்தில் பிரபலமாகி வருகிறது.