‘வார் 2’ என்பது பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கிய படம், இதில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டிருந்தது.
முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட கியாரா அத்வானி, ஹிருத்திக் ரோஷனுடன் நடித்த அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.

‘ஹிருத்திக் ரோஷனுடன் திரையைப் பகிர்ந்து கொண்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, இயக்குனர் அயன் முகர்ஜி, மற்றொரு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அற்புதமான குழுவினர் இணைந்து ‘வார் 2’ படத்தை எவ்வாறு உயிர்ப்பிக்கிறார்கள் என்பதைப் பார்க்க உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.
அவர்களைப் போலவே, நானும் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறேன்,” என்று அவர் கூறினார். பாலிவுட்டில் இதுவரை வெளியான மிகப்பெரிய ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர்களில் ‘வார் 2’ ஒன்றாகக் கூறப்படுகிறது. ஹீரோவுக்கு ஐஸ் வைத்த கியாரா அத்வானியின் பதிவு வைரலாகி வருகிறது.