சென்னை: தனுஷின் ‘குபேரா’ முதல் நாளிலேயே ரூ.30 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் உலகமெங்கும் முதல் நாளில் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குபேரா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு தமிழில் கலவையான விமர்சனங்களும், தெலுங்கில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இப்படம் முதல் நாளில் உலகம் எங்கும் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இப்படம் ரூ.14.75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.