ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இசையமைப்பாளர் அனிருத்தின் ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் பிரபலமானாலும், 3 படத்தின் தோல்வி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர், வை ராஜா வை படத்தை இயக்கிகினார். அதுவும் வெற்றி பெறவில்லை.
சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின், ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கினார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், மற்றும் ரஜினிகாந்த் சிறப்பாக நடித்தனர். படம் பிப்ரவரியில் வெளியானாலும், கதை மற்றும் சில சிக்கல்களால் தோல்வியை சந்தித்தது.
சில முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் தொலைந்ததால் OTT ரிலீஸ் தாமதமானது. தற்போது, ஏ.ஆர்.ரகுமான் புதிய பின்னணி இசை சேர்த்துவிட்டு, தீபாவளிக்கு OTT-யில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.