சென்னை: ‘கூலி’ படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வெளியான தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மறுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த் நலமாக உள்ளார். நேற்று இரவும் பேசினேன். அதை நானே விளக்க முடியும் என்று நினைக்கிறேன். விசாகப்பட்டினம் ஷூட்டிங் திட்டமிடப்படுவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் அல்லது 40 நாட்களுக்கு முன்னதாக அக்டோபர் 30-ம் தேதி ஒரு சிறிய சிகிச்சை இருப்பதாக ரஜினி எங்களிடம் கூறியிருந்தார்.
ஏனென்றால் இவரைத் தவிர மற்ற மாநில நடிகர்களின் தேதிகளும் முக்கியம் என்பதால் இந்த சிகிச்சை குறித்து முன்கூட்டியே சொல்லிவிட்டார். அதற்காகத்தான் படப்பிடிப்பைத் திட்டமிட்டோம்.
அதனால் அவரது படப்பிடிப்பை 28-ம் தேதி முடித்து அனுப்பினோம். இந்த சிகிச்சை குறித்து முன்பே அறிந்திருந்தும், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் இதைப் பற்றி பேசுவதைக் கண்டு பயந்தோம்.
படப்பிடிப்பின் போது ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால், படக்குழுவினர் அனைவரும் இங்கு மருத்துவமனை வாசலில் நின்றிருப்போம். நாங்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்க மாட்டோம்.
ரஜினி எல்லோரும் கொண்டாடக்கூடிய ஒரு பிரபலம். அப்படி இருக்கும் போது சிலர் உறுதியாக இருந்ததால் எல்லாம் தெரிந்தது போல் பேட்டிகளில் பேசி எங்களை பயமுறுத்தினார்கள்.
ரஜினி எப்போதும் நல்லவர். கடவுள் அருளால் அவருக்கு எதுவும் ஆகாது. ஊடகங்களில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தாலே பயம் வருகிறது. இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். தயவு செய்து யாரையும் பயமுறுத்தாதீர்கள்” என்று லோகேஷ் கனகராஜ் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ரத்த நாள வீக்கம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சையின்றி, தலையீட்டு சிகிச்சை மூலம் சரி செய்ய திட்டமிடப்பட்டு, ‘ஸ்டென்ட்’ கருவி பொருத்தப்பட்டது.
சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.