‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இதில் எஸ்.ஜே. சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, கவுரி கிஷன், ஷாரா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசையமைத்துள்ளார். ரவுடி பிக்சர்ஸ் சார்பாக நயன்தாராவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக எஸ்.எஸ். லலித்குமாரும் இதைத் தயாரித்துள்ளனர்.

இதன் டீசர் ஆகஸ்ட் 27 அன்று வெளியிடப்படும். இந்த சூழ்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 17-ம் தேதி வெளியாகும்.