சென்னை: நடிகர் விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
சுந்தர் சி 2013ம் ஆண்டு ‘மத கஜ ராஜா’ எனும் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்துள்ளனர்.
படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்ற மை டியர் லவ்வர் பாடல் 12 வருடங்கள் முன்பே மிக வைரலானது. இப்பாடலை விஷால் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படம் வரும் 12-ந் தேதி பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் புது டிரெய்லரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.