சென்னை நகரை கலக்கவைத்திருக்கும் விவகாரம் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவைச் சுற்றி உருவாகியுள்ளது. மெஹந்தி சர்கஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாதம்பட்டி, பின்னர் பல படங்களில் நடித்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டாவுடன் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.

ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், சென்னையில் திருவீதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்ததாகவும், அதற்கு இரண்டாண்டுகள் ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய குழந்தைக்கும் மாதம்பட்டியே தந்தை எனக் கூறிய அவர், நீதிமன்றத்தில் ‘ஜுடிஷியல் செபரேஷன்’ நிலையில் இருப்பதாக மாதம்பட்டி கூறியதால் தான் நம்பி திருமணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மாதம்பட்டி அனுப்பிய வீடியோவை ஜாய் வெளியிட்டார். அந்த வீடியோவில் “ஓய் பொண்டாட்டி… என்னடி பண்ற பொண்டாட்டி… ஐ மிஸ் யூ… ஐ லவ் யூ” என மாதம்பட்டி பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, பல்வேறு தரப்பினரிடையே விவாதமாக மாறியுள்ளது. சிலர் இது அவருக்கு சொன்ன வீடியோ என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் இல்லை என கருத்து தெரிவிக்கின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது குற்றச்சாட்டு வலுப்பெறும் நிலையில், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உண்மையை அறிய ஆவலாக உள்ளனர். சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ள இந்த விவகாரம், விரைவில் நீதிமன்றம் மற்றும் காவல் துறையின் விசாரணை மூலம் தெளிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.