சென்னை: மக்களின் வரவேற்பை தொடர்ந்து வெற்றியை உற்சாகத்தோடு மெட்ராஸ் மேட்னி படக்குழு கொண்டாடியுள்ளது.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் நடத்தினர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இசையமைப்பாளர் கே. சி. பால சாரங்கன் பேசுகையில், ” அனைவருக்கும் நன்றி. இப்படம் தொடர்பாக இணையத்தில் வெளியான அனைத்து விமர்சனங்களையும் நான் கவனித்து வாசித்திருக்கிறேன். அனைவரும் தங்களின் மேலான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். படத்தை தங்களுடைய படமாக நினைத்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இந்த படத்திற்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை ஒலி மூலம் வழங்கிய தொழில்நுட்பக் கலைஞர் ரூபனுக்கும் நன்றி. என்றார்.
நடிகர் விஷ்வா பேசுகையில், ”இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி. வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவங்களை சந்திக்கிறேன். எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படத்தில் நடிப்பதற்கு ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கு நன்றி. குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து தினேஷ் கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் .