தமிழ் சினிமாவில் சிம்புவுடன் நடித்த சரவணா படத்தின் மூலம் அறிமுகமான மேக்னா நாயுடு, அதன்பின் வீராசாமி, ஜாம்பவான், வைத்தீஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனுஷின் குட்டி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடியும் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வந்த மேக்னா, கடந்த 2017ல் போர்ச்சுகலைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகுவல் ரெய்சை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு இந்தியாவிலும் சில படங்களில் நடித்த மேக்னா, பின்னர் சினிமாவிலிருந்து விலகி தனது கணவருடன் போர்ச்சுகலில் வசிக்கத் தொடங்கினார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட சில கிளாமரான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கருப்பு நிற பிகினியில் கடற்கரையில் கணவரை கட்டிப்பிடித்து எடுத்த புகைப்படங்களும், அதனுடன் அவர் எழுதிய உணர்ச்சிமிகுந்த கேப்ஷனும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேக்னா, “நீங்க ஏன் எப்பவும் கடற்கரைக்குப் போறீங்க?” என்கிற கேள்விக்கு, கடல், மணல், சூரியன் அனைத்தும் மனதிற்கு அமைதியைக் கொடுக்கும், சிந்தனையைத் தூண்டும் ஒரு இடமாக கடற்கரை இருக்கிறது என தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கடலின் சத்தம் நம்மை தியான நிலைக்குத் தள்ளுகிறது என்றும், அலைகளின் ஒலி நம்முள் ஒரு அமைதியை உருவாக்குகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
8 ஆண்டுகளாக திருமணமான மேக்னாவிற்கு இதுவரை குழந்தை இல்லை என்பதையடுத்து, தத்தெடுக்கும் திட்டம் குறித்து வந்த செய்திகளை மறுத்த அவர், விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்திலுள்ளதாக கூறியுள்ளார். குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், கணவர் அதற்குத் தோழனாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.