மாளவிகா மோகனன் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவிற்கு இடையே கலாச்சார வேறுபாட்டை நான் காண்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும் ஒரு திரைக் கலைஞனாக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் வெவ்வேறு மொழி, உணவு, ஆசாரம் மற்றும் பேசக்கூடாதவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நடிகர்கள் நவீன நாடோடிகளைப் போன்றவர்கள்.
ஒரு நாள் ஹைதராபாத், அடுத்த நாள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமத்துக்குப் பயணிக்க வேண்டும். அதனால் லொகேஷனுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும், தமிழ் மற்றும் தெலுங்கில் 8-9 மணி நேரம் படப்பிடிப்பு நடக்கும்.
இந்தியில் 12-13 மணி நேரம் ஆகும். சில நேரங்களில் அது 14 மணிநேரம் வரை செல்லும். நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்குக் கிடைப்பதில்லை.
ஒரு படம் வெற்றி பெற்றால் அதற்கு நடிகர்கள் தான் காரணம். ஓடவில்லை என்றால் ஹீரோயின் மீது பழி போடுவார்கள். தென்னிந்திய சினிமாவில் இது சகஜம் என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.