சென்னை மற்றும் கேரளா மாவட்டங்களில் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் உள்ளிட்டோரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 17 இடங்களில் நடைபெற்று வரும் இந்த சோதனை, சட்டவிரோதமாக சொகுசு கார்களை இந்தியாவுக்கு கடத்திய விவகாரத்தைப் பின்பற்றியுள்ளது.

சோதனை தொடர்பாக, லேண்ட் க்ரூசர், டிஃபெண்டர், மசெரட்டி போன்ற ஆடம்பர கார்கள், பூடான் மற்றும் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ள சந்தேகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சில கார்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், பணப்பரிவர்த்தனை முறைகேடு உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
FEMA சட்டத்தின் பிரிவு 3, 4 விதிகளை மீறியதற்கான முகாந்திரம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பு செப்டம்பர் 23-ஆம் தேதி சுங்கத்துறை சோதனையின் போது 39 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 150-200 கார்கள் முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரர்கள், சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு மூலம் பலன் பெற்றவர்கள் யார் என்பதை விசாரித்து வருகின்றனர். சோதனை முடிவுக்கு பிறகே அதிக தகவல்கள் வெளிப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.