சென்னை: 2009-ம் ஆண்டு ‘வைகை’ படத்தின் மூலம் அறிமுகமான மலையாள நடிகை சுவாசிகா விஜய் (33), ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் தமிழில் மீண்டும் அறிமுகமானார். இதில் ‘அட்ட கத்தி’ தினேஷின் மனைவியாக நடித்த இவருக்கு தமிழ், தெலுங்கில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்போது சூரியின் ‘மாமன்’ மற்றும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சூர்யா 45’ ஆகிய படங்களில் நடித்து வரும் சுவாசிகா விஜய், ‘மாமன்’ படத்தில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது திடீரென விபத்தில் சிக்கினார். அவளது இடது கையில் காயம் ஏற்பட்டது.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘சூர்யாவின் படத்தில் நடிக்கும் போது நான் விபத்துக்குள்ளானதாக பல இணையதளங்கள் செய்தி வெளியிட்டன. அது தவறு. ‘மாமன்’ படத்தில் நடிக்கும் போது எனக்கு சிறு காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று மீண்டும் படப்பிடிப்பை தொடர்ந்தேன்’ என்றார்.