2022ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படமான 12th Man, 11 நண்பர்களின் பேச்சுலர் பார்ட்டி மற்றும் அதனை சுற்றி நடக்கும் திகில் சம்பவங்களை மையமாகக் கொண்டது. மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த த்ரில்லர், தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

2021ல் வெளிவந்த Kaanekkaane, ஒரே நாளில் நடக்கும் திரைக்கதையுடன் காதல் திருமணத்தைச் சுற்றி சுவாரஸ்யமான திரில்லர் சம்பவங்களை முன்வைக்கிறது. டொவினோ தாமஸ் நடித்த இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.
அதே ஆண்டில் வெளியான Nayattu, காவலர்கள் தாங்கள் பணிபுரியும் காவல்துறையிலிருந்தே தப்பிக்க முயற்சிக்கும் கதையைச் சொல்கிறது. தொடர்ந்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை கூட்டும் இப்படம் நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.
மேலும், 2021ல் வெளிவந்த ஆக்ஷன் திரில்லர் Kala, நாயைக் கொன்ற சம்பவத்தால் ஏற்படும் பழிவாங்கும் கதையை மையமாகக் கொண்டது. டொவினோ தாமஸ் நடித்த இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 ஓடிடிகளில் பார்க்கலாம்.
இப்படங்கள் அனைத்தும் மலையாள சினிமாவின் த்ரில்லர் உலகத்தை விரும்பும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன.