சென்னை: 73 வயதாகியும் மலையாள சினிமாவில் மம்மூட்டி இன்னும் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். சமீபத்தில் உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்ததாக செய்திகள் வந்தன. அவருக்கு புற்றுநோய் இருப்பதாக செய்தி பரவியபோது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அது உண்மை இல்லை என்று மம்மூட்டி தரப்பு விளக்கியிருந்தது.
ஆனால் அவருக்கு குடல் புற்றுநோய் இருப்பதாகவும், சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மம்மூட்டியின் நண்பரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜான் பிரிட்டாஸ் சமீபத்தில் மம்மூட்டியின் உடல்நிலை குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார்.

“மம்மூட்டியின் உடலில் பிரச்சனை இருப்பது உண்மைதான். ஆனால் செய்திகளில் கூறப்படுவது போல் அது மோசமடையவில்லை. அவர் அதற்கான சிகிச்சையில் இருக்கிறார். தற்போது அவர் குணமடைந்து வருகிறார். நான் அவரிடம் தொலைபேசியில் பேசினேன்,” என்று ஜான் பிரிட்டாஸ் கூறினார்.