கமல், சிம்பு மற்றும் பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் எண்டர்பிரைசஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

‘தக் லைஃப்’ படத்தை முடித்த மணிரத்னம் அடுத்ததாக புதுமுகங்களை நடிக்க வைத்து காதல் படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கதை இறுதி செய்யப்பட்டாலும், திரைக்கதையில் சில மாற்றங்களை மட்டும் செய்து வருகிறார் மணிரத்னம்.
‘தக் லைஃப்’ படம் வெளியான பிறகு, படத்தைத் தொடங்கி மொத்தப் படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். சமகால காதலர்களை மனதில் வைத்து எழுதியிருக்கிறார். இதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைப்பாளர்.