சென்னை: கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ் பெற்ற சரோஜாதேவிக்கு தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் “நாடோடி மன்னன்”.
இதன் பின்னர் ஸ்ரீதரின் “கல்யாணப் பரிசு” (1959) படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். சரோஜாதேவி 1967-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அன்று எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயர் ஸ்ரீ ஹர்ஷாவை திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் அவர் நிதி நெருக்கடி மற்றும் வருமான வரி சிக்கல்களை எதிர் கொண்டார்.
இந்த சிக்கல்களை சமாளிக்க அவரது கணவர் உதவினார். மேலும் அவரது நிதிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று அவருக்குக் கற்றுக் கொடுத்தார். சரோஜாதேவி கணவர் ஸ்ரீஹர்ஷா 1986-ல் ஆண்டு இறந்தார்.