செப்டம்பர் 23-ம் தேதி நடிகர் மோகன்லாலுக்கு திரைப்படத் துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மோகன்லாலைக் கௌரவிக்கும் வகையில், அக்டோபர் 4-ம் தேதி கேரள அரசு சார்பாக ‘மலையாள வானோலம், லால் சலாம்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெறும்.
இதை கேரள கலாச்சார அமைச்சர் சஜி செரியன் அறிவித்தார். திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிற உயர் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.

நிகழ்விற்கான லோகோ வெளியிடப்பட்டது. “நடிகர் மோகன்லால் கடந்த 50 ஆண்டுகளாக மலையாள சினிமாவுக்கு சிறப்பு பங்களிப்பை அளித்துள்ளார்” என்று அமைச்சர் சஜி செரியன் கூறினார். மலையாள நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு சரியான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது.