சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி படம், கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியாகி நிறைவு பெற்றுள்ளது. இதில் இடம்பெற்ற மோனிகா பாடல் உலகளவில் டிரெண்டிங் ஆகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார், பாடகர் சுபலாஷினி பாடியுள்ளார்.

பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளில் இறுதியில் அமைந்துள்ள வரிகள் வாழ்க்கைக்கு உகந்த சில தன்னம்பிக்கை ஊட்டும் தத்துவங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக,
“உரசாம பத்திக்கவா
உதட்டோரம் தித்திக்கவா
இருக்காத ஒத்தையில ஒத்தையில”
இந்த வரிகள் வாழ்க்கையில் தனியாக இருக்க கூடாது; வாழ்க்கைத்துணை முக்கியம் என்பதைக் கூறுகின்றன.
மேலும், “சாகும் நேரத்தில்
பொலம்பி அழுவாத
பூஜை ஆட்டத்தில்
இன்னோசென்ட் நானா தொல்லை” எனும் வரிகள், மரணத்தை தைரியமாக எதிர்கொள்வது முக்கியம் என்று சொல்கின்றன. வாழ்க்கை முழுவதும் அழுதே இருப்பதைவிட, இறுதி நேரத்தில் நம்பிக்கையுடன் நிற்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.
பாடலின் மற்றொரு தத்துவமான வரிகள்:
“வறுமை கோலத்தில்
நேர்மை பாக்காத
இளமை காலத்தில்
டீசென்சி நல்லா இல்ல”
இந்த வரிகள் தனிப்பட்ட வாழ்க்கைக்கே பொருந்தும் அறிவுரையாகும். லிரிக் வீடியோ யூடியூபில் 153 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர், வீடியோ பாடல் வடிவில் 7 மில்லியன் பார்வையாளர்கள் ரசித்துள்ளனர்.