சென்னை: இந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அதிக லாபத்தை ஈட்டிய படங்களில் முதலிடம் பிடித்தது சசிகுமார் நடிப்பில் வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி தான். இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் இயக்கியிருந்தார். சிம்ரன், ரமேஷ் திலக், பக்ஸ், பகவதி பெருமாள், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த வெற்றிக்குப் பின், படத்தின் தயாரிப்பு நிறுவனம் எம்.ஆர்.பி என்டர்டைமெண்ட், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கியுள்ள சீயோன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜின் எம்.ஆர்.பி என்டர்டைமெண்ட் நிறுவனம் இதற்கு முன் குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய மூன்று படங்களை தயாரித்துள்ளது. இந்த மூன்று படங்களையும் “மில்லியன் டாலர்” நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தது.
ஆனால், இப்போது அந்த நிறுவனம் இல்லாமல், நேரடியாக சௌந்தர்யா ரஜினிகாந்தின் சீயோன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய முயற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்த கூட்டணி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களும் திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த புதிய படம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.