தென்னிந்திய திரைத்துறையில் சிறப்பாக வளர்ந்து வரும் மிருணாள் தாக்கூர், தற்போது பாலிவுட் வரிசையிலும் அசத்தி வருகிறார். மிகத் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளார்.
மிருணாள், “சீதா ராமம்” படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். நூர்ஜஹான் என்ற கதாபாத்திரத்தில் அவர் அளித்த நடிப்பு, இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அளவுக்கு தாக்கம் செலுத்தியுள்ளது. 2022-ல் வெளியான இந்த படம், திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் தொடர்ந்து பார்க்கப்படும் திரைப்படமாகும்.

துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடித்த அந்தப் படத்தில் இருவரும் ரசிகர்களை காதலில் உறைய வைத்தனர். கடந்த மாதம் வெளியான “தக் லைஃப்” படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அந்த பாடல் படத்தில் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், மிருணாள் தாக்கூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது, தனது பயிற்சியாளர் கூறிய ஒரு பயிற்சியை முடியாது என கூறுகிறார்.
அதையடுத்து, டிரெண்டான தாய்லாந்து பாடல் “அண்ணனா பாத்தியே”க்கு அவர் நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பயிற்சியாளர் நர்மதாவுடன் சேர்ந்து அவர் ஆடிய டான்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மிருணாள் தனது பதிவில், அந்த தருணம் மகிழ்ச்சியானது என்றும், பயிற்சியாளர் வழங்கும் பயிற்சிகள் தரமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள், “மிருணாள் தாக்கூர் செம க்யூட்” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அவர் அடுத்ததாக நடிக்கும் படம் “சன் ஆஃப் சர்தார் பாகம் 2”. இதில் அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்துள்ள இப்படம் ஜூலை 25ம் தேதி வெளியாகிறது.