ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘கூலி’ திரைப்படம் இன்று ரசிகர்களால் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் ரிலீஸை ஒருபக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கிடையே மற்றொரு பக்கம் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மதராஸி திரைப்படம் பற்றிய ப்ரோமோஷன் நடவடிக்கைகள் ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. கூலி திரையரங்குகளிலும், இடைவேளைகளிலும் மதராஸி மேக்கிங் வீடியோ, பேனர்கள், ப்ரோமோ வீடியோக்கள் காட்டப்படுவதால் ஹைப் அதிகரித்துள்ளது.

முதலில் மதராஸி திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை என்றே கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான சிங்கிள் மற்றும் மேக்கிங் வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக இந்த ப்ரோமோஷன்கள் கூலி படத்துடன் இணைந்து வெளியானதுதான், மதராசி படத்தை மாஸ் லெவலுக்கு தூக்கியுள்ளது. இது படக்குழுவின் புரட்சிகரமான ப்ரோமோஷன் தந்திரமாகவும், சரியான திட்டமிடலாகவும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி தனியாக வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனின் கடந்த வெற்றிப் படமான அமரன் தரும் மெசேஜ் தொடர்ச்சியாக மதராசி படத்தின் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முருகதாஸுக்காகவே இந்த படம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தர்பார், சிக்கந்தர் தோல்விக்குப் பிறகு, ஒரு பழைய முருகதாஸ் ஸ்டைலில் திரும்பி வர அவருக்கு இது ஒரு சான்ஸ்.
மதராஸி வெற்றி பெற்றால், அது சிவகார்த்திகேயனுக்குப் பெரிதும் உதவுவது மட்டுமல்லாமல், முருகதாஸுக்கும் ஒரு வின்டேஜ் கம்பேக் ஆக அமையும். கஜினி, துப்பாக்கி, கத்தி போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குநரின் மீண்டும் முழு வேகத்தில் திரும்பும் நாள் இது ஆகும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதற்கான முதல் அடியாக, கூலி ரிலீஸை சரியாக பயன்படுத்தி மதராஸி பட ஹைப்பை தூக்கிய படக்குழுவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.