பிக்பாஸ் சீசன் 8 விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி பொறுப்பேற்றார். இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜய் விஷால், ஆர்.ஜே. ஆனந்தி, சுனிதா, ரஞ்சித், தர்ஷா குப்தா, சஞ்சனா, அக்ஷிதா, அர்னவ், சத்யா, தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முடிவில் முத்துக்குமரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஆனால், இந்த இறுதிப் போட்டியில் முத்துக்குமரன் வெற்றி பெற்றது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதற்கு முத்துக்குமரனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், அவரது பி.ஆர் பணி குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மற்ற இறுதிப் போட்டியாளர்களின் ஆதரவாளர்களும் முத்துக்குமரனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.