55-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய திரையுலகின் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். நாகார்ஜுனா சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அவரது தந்தை நாகேஸ்வர ராவ் வாழ்க்கையை படம் எடுப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு நாகர்ஜுனா, “நாகேஸ்வரராவ் வாழ்க்கையை ஆவணப்படம் எடுப்பது சிறந்தது என்று நினைக்கிறேன். அவரது வாழ்க்கையைப் படம் எடுப்பது மிகவும் கடினம். அவரது வாழ்க்கையில் தொடர்ச்சியான உயரங்கள் மட்டுமே உள்ளன. அதைத் திரைப்படமாக எடுப்பது ஒரு விதமான சலிப்பை தரும். ஒரு படத்தின் கதையை சொல்லும் போது ஏற்ற தாழ்வுகள் இருந்தால் தான் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
நாகேஸ்வரராவ் திறமையானவர். அவன் வாழ்வில் உயரங்கள் மட்டுமே உள்ளன. எனவே, நாகேஸ்வரராவ் வாழ்க்கையை ஆவணப்படமாக கொண்டு வருவோம்” என்றார். தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் நாகேஸ்வர ராவ். நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர். தெலுங்கு திரையுலகின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.