2021ம் ஆண்டில் மாஸ்டர் படத்தில் ஹீரோவாக நடித்த விஜயை விட வில்லனாக நடித்த விஜய் சேதுபதியே ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அதே காட்சி இப்போது ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திலும் நடந்துவிட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படம், இந்தியாவில் மட்டும் 11 நாட்களில் ரூ. 249 கோடியும், உலகளவில் ரூ. 447.5 கோடியும் வசூல் செய்துள்ளது. வசூல் குறைந்து வந்த நிலையில் திடீரென 96% அதிகரித்து ரூ. 11.51 கோடி ஒரே நாளில் வசூலித்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஆனால், ஹீரோவாக நடித்த ரஜினியை விட வில்லனாக நடித்த நாகர்ஜுனாவே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். சைமன் என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய கெத்து, ஸ்டைல், திரைக்காட்சி அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் கூட ஹீரோவை விட வில்லனை அதிகமாக கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல், மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரமே ரசிகர்களை கவர்ந்தது. அப்போது போலவே கூலியிலும் நாகர்ஜுனா கதாபாத்திரம் இறந்த பிறகு படம் சற்றே சுவாரஸ்யத்தை இழந்துவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது லோகேஷ் கனகராஜ் படங்களில் வில்லன்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையே வெளிப்படுத்துகிறது. ஹீரோக்களையும் மிஞ்சும் அளவுக்கு வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுவது தமிழ் சினிமாவில் புதிய போக்காக மாறி வருகிறது.