ஹைதராபாத்: நானியின் பான் இந்தியா படமான ‘ஹிட்: தி தேர்ட் கேஸ்’ சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இதில், ‘கேஜிஎஃப்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் யாஷுடன் ஜோடியாகவும், தமிழ் படமான ‘கோப்ரா’வில் விக்ரமுடன் ஜோடியாகவும் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

ராவ் ரமேஷ், பிரம்மஜி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சானு ஜானி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மிக்கி ஜே. மேயர் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் தமிழ் பதிப்பை சினிமாட்டோகிராபி கம்பெனி வெளியிடுகிறது.
இந்த சூழலில், ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்வில் பங்கேற்ற இயக்குனர் ராஜமௌலி, மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா நடிக்கும் ‘பான் வேர்ல்ட்’ படத்திற்குப் பிறகு தான் இயக்க திட்டமிட்டுள்ள ‘மகாபாரதம்’ என்ற மெகா படத்தில் நானி ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும், தற்போது அவரை மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அறிவித்தார்.