நயன்தாராவின் ஆவணப்படத்தில் இருந்து 3 விநாடி காட்சியை “நானும் ரவுடிதான்” படத்திலிருந்து அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதனுடன், “சந்திரமுகி” படத்தின் காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக மற்றொரு சர்ச்சையும் உருவாகியுள்ளது.
பிரபு தயாரித்த “சந்திரமுகி” திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாரா தனது ஆவணப்படத்தில் பயன்படுத்தியதால், பிரபுவும் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியானது. “சந்திரமுகி” தயாரிப்பு நிறுவனம், இதை மறுத்து, அனுமதி வழங்கியதாக தெரிவித்துள்ளது.
பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கும்போது, நயன்தாராவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். “பணம் சம்பாதிக்கும்போது, உரியவர்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரங்களில் நயன்தாரா, எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட மறுப்பதால், புதிய சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. ஆனால், தயாரிப்பு நிறுவனங்கள் இதை வழக்கு அளவிற்கு கொண்டு செல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்தனர்.இதற்கிடையில், நயன்தாரா தரப்பு எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை.