சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நானும் ரவுடி தான்’ படத்தின் படப்பிடிப்பில் சில காட்சிகளை பயன்படுத்துவது தொடர்பாக தனுஷ்-நயன்தாரா இடையே சட்ட ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் படப்பிடிப்பின் காட்சிகளை நெட்ஃபிக்ஸ் OTT தளத்தில் வெளியிடப்பட்ட ‘நானும் ரவுடி தான்’ ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக தனுஷ் இழப்பீடு கோரியுள்ளார். இது தொடர்பாக தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
‘நானும் ரவுடி தான்’ மற்றும் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நயன்தாரா கூறியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா மீது தனுஷ் தொடுத்துள்ள வழக்கு தற்போது இருவருக்கும் இடையே சர்ச்சையை அதிகரித்து வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தனுஷை குற்றம் சாட்டி தங்கள் இன்ஸ்டாகிராம்களில் பதிவுகளை பதிவிட்ட நிலையில், தனுஷ் இதுவரை எந்த விளக்கமோ பதிலோ தெரிவிக்கவில்லை.
சட்டரீதியாக இந்தப் பிரச்னையை அணுகி வருகிறார். இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மறைமுகமாக ‘கர்மா என்ன சொல்கிறது என்றால், பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை சீரழிக்க நினைத்தால் வட்டியும், அசலும் திரும்ப வரும்’ என பதிவிட்டுள்ளார். இது வைரலாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘சிம்புவை காதலித்து ஏமாற்றிவிட்டீர்கள். பிரபுதேவாவை காதலித்து அவரை மனைவியிடமிருந்து பிரித்தீர்கள். இந்த கர்மம் உன்னை சும்மா விடாது’ என நயன்தாராவை தாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.