சென்னை: தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், படத்தின் மோசமான நடிப்பால் தமிழில் இருந்து தெலுங்கிற்கு மாறிய பூஜாவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உள்ளார். முன்னணி நடிகையான இவர் தற்போது விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பூஜா ஹெக்டே கூறிய ஒரு வார்த்தைக்காக நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது, பூஜா ஹெக்டே பேட்டியில் ‘அலா வைகுண்டபுரம்லோ, தமிழ்ப் படம்’ என்று தவறுதலாக கூறியிருக்கிறார். இவர் நடித்த படம் தமிழா அல்லது தெலுங்கா என்று கூட தெரியாமல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடலில் பூஜா ஹெக்டேயின் நடனம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.